முக்குடைப் புரவலர் சந்தா : ரூ. 2500/- (மூன்று ஆண்டுகள் )
தங்களிடம் பணிவான வேண்டுகோள்
உங்கள் முக்குடை இதழுக்கு இது 50 ஆவது ஆண்டு.
முக்குடை இதழ் வெளியீட்டில் ஜைன இளைஞர் மன்றத்திற்கு உற்ற துணைவராக, நண்பராகக் கை கொடுத்து அதன் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தங்களுக்கு பணிவான வணக்கங்கள். உங்கள் முக்குடை பொன்விழா ஆண்டை இன்று எட்டுவதற்குத் தங்கள் பங்களிப்பே முதற் காரணம் என மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்; சமண சமூகத்தை சமண சமயத்தை தமிழுக்கு அதன் வானளாவிய கொடையை சமணரல்லாதோர் பலரும் முக்குடை இதழின் வாயிலாகவே அறிந்துவருகிறார்கள்.
இது மட்டுமின்றி, இலைமறை கனிகளாக ஆங்காங்கு சிதறுண்டு வாழும் நம் சமண நெறியாளர்களின் சமூக, சமுதாய, குடும்ப, சமய நிகழ்ச்சிகள் எனப் பல வகையான செய்திகளையும், திருமண விவரங்கள், சமய விழாக்கள், ஆலயத் திருப்பணிகள், வாசகர் கடிதங்கள் என அருகன் அருளிய ஆகமம், ஆன்மீகம், தீர்த்தங்கரர்கள் வரலாறு, வழிபாடு, இலக்கியம், சமூக வரலாறு, சமணம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் அவற்றைப் பாதுகாப்பதற்கான கட்டுரைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு சமணர்களிடையேயும் தமிழ் கூறும் நல்லுலகத்தோடும் நல்ல தொடர்புப் பாலமாக விளங்கி வருகிறது
சமூக உயர்வுக்கும், சமய மேன்மைக்கும், அறம் பரப்பும் தொண்டிற்கும் தமிழக சமணர்கள் இடையே ஊக்கமும் சிந்தனையும் எழுச்சி பெற இடையறாது 50 ஆண்டுகளாக முக்குடை எடுக்கும் முயற்சிகள் இன்னும் வலிமைபெற தயங்காமல் உதவிடும் தங்களுக்கு மிக்க நன்றி.
இவ்வாறிருக்க, அவ்வப்போது உயரும் காகித விலை, அச்சுக் கட்டணம் மற்றும் அஞ்சல் செய்வதற்கான பொருட்கள், பணியாளர்கள் இவர்களுக்கான செலவினங்கள் காரணமாக முக்குடை இதழ் வெளியீட்டுக்கான செலவு, பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் பன்மடங்காக அதிகரித்துவிட்டது; இருந்தபோதும் ஐம்பது ஆண்டுகளாக இடைவிடாது இதழ்கள் சமண இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
முக்குடைவெளியீட்டில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் செலவுக்கு ஏற்ப தாங்கள் முன்பு ஒருதடவை வழங்கிய புரவலர் தொகை அதிகரிக்கப்படவில்லை. கடுமையாக அதிகரித்துள்ள முக்குடை வெளியீட்டு செலவை ஓரளவு சமாளிக்க 1 ஆண்டுகளுக்கு புரவலர் தொகை ரூபாய் 2500/- என செலுத்தி உதவ வேண்டுகின்றோம்.
சமண சமூகத்தின் உயர்வுக்கும் சமய மேன்மைக்கும் சிந்தனைகொண்டு செயலாற்றும் தங்களைப் போன்ற கொடை உள்ளம் கொண்டோர் ஆன்றோர்கள், சான்றோர்கள், அன்பர்கள், அறிஞர்கள், நண்பர்கள் எனப் பலரும் நல் உள்ளங்களுடன் அளிக்கும் ஆதரவும், ஆசியும் முக்குடை இதழினை மென்மேலும் சிறப்பாக வெளியிட என்றும் துணை நிற்கும்.
வளர்க அருளறம்!
நன்றி! மிக்க நன்றி! முக்குடையான் தாள் போற்றி!
வளர்க அருளுணர்வு!