எங்களை அழைக்க :

+91 9941698230

மின்னஞ்சல் :

editormukkudai@gmail.com

>
>
சனரின் தமிழிலக்கண நன்கொடை

பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்களின் சனரின் தமிழிலக்கண நன்கொடை எனும் நூல்இந்நூல் தமிழ் இலக்கணநூல்களின் வரலாறு , பொருள், ஒப்பீடு , ஆகியவற்றிற்கு மிகப் பெரிய அரிய ,சிறந்த படைப்பாகும். சமணர்களின் அரிய தமிழ்த் தொண்டுகளில் இலக்கணக் கொடை குறித்து ஆழ்ந்து ஆய்ந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் படைக்கப்பட்ட நூல் இது . இதில் 1- தமிழ் நாட்டில் சைனம் –ஒரு வரலாற்று நோக்கு, 2- சைனரின் இலக்கணப் பணி 3- சைனரின் இலக்கண உரைப் பணி -4- சைனர் படைத்த நிகண்டுகள் என நான்கு பகுதிகளில் 482 பக்கங்கள் கொண்ட நூல்- .தொல்காப்பியம் முதலாக 18 இலக்கண நூல்கள் - இலம்பூரணாரின் தொல்காப்பிய உரை முதலாக 9 இலக்கண உரை நூல்கள் சூடாமணி நிகண்டு மற்றும் சில குறித்து இதில் உள்ளன- இது தமிழக அரசினரின் சிறந்த தமிழ் நூலுக்கான சிறப்பு விருதினை பெற்றதாகும் . மற்றொரு சிறப்பு ஜைன இளைஞர் மன்றத்தின் தொடக்க ஆண்டின் , (1974 ) முதல் நூல் வெளியீடு இதுவேயாகும்