தமிழ் சமண சமூகத்திற்கான அர்பணிப்பு சேவையில் இன்று 50 ஆண்டுகள் 1974 ஆம் ஆண்டில் மகாவீரரின் 2500 ஆவது பரிநிர்வாண ஆண்டில் ஜைன இளைஞர் மன்றம் நிறுவப்பட்டது. அகிம்சையைப் பரப்புவதற்கும், தமிழ் சமூகத்தின் சமணப் பாரம்பரியத்தை சிறந்த முறையில் முன்னிலைப்படுத்திடவும் , தமிழ் இலக்கியம் இலக்கணம் மற்றும் பல்வேறு அம்சங்களில் சமணர்களின் பங்களிப்பு, சமணர்களை தொன்மைக் கல்வெட்டுகளை பிறர் அறியும் விதமாக வெளிக்கொணர்வதற்கும், ; தமிழ்ச் சமண சமூகத்தின் சமூகம், அதன் கடந்த கால,இக்கால சூழல்கள் குறித்தும் .அந்தப் புனிதமான ஆண்டிலிருந்து ஜைன இளைஞர் மன்றம் செயல்படத் திட்டமிட்டு– எங்கள் புரவலர்கள் மற்றும் வாசகர்களின் ஆசிகள் ,உதவிகள் ,வழிகாட்டுதல் இவற்றுடன் இந்த நோக்கங்களை செயல்படுத்தும் உறுதியை ஏற்றுக்கொண்டுள்ளது.