ஜைன இளைஞர் மன்றம் மற்றும் முக்குடையின் பிறப்பு
மனித சமூகத்தை ஒழுங்கு முறையில் இனிது நடத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் பல பல; இந்தவகையில் நிறுவப்பட்டதே ஜைன இளைஞர் மன்றம். இளைஞர் மன்றத்தின் பரந்துபட்ட குறிக்கோள்கள் இரண்டேயாம் - ஒன்று சமூக உயர்வு, மற்றொன்று சமய மேம்பாடு; எவ்வகையிலும் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத அறிஞர்கள், கல்வியாளர்கள், அருகர் நெறிச் செல்வர்கள் அனைவரும் இணைந்து இந்த இரண்டிற்காகவே 1974ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஏற்படுத்திய ஓர் அமைப்பு உங்களது இளைஞர் மன்றம் ஆகும்.
பெரு மதிப்பிற்குரிய சிவ ஆதிநாதன், V. C ஸ்ரீ பாலன், D. சம்பத்குமார், A சின்னதுரை, S தன்யகுமார் தர்மராஜன், B. தரணி குமார், J. ஸ்ரீ பாலன் ஆகியோர் இணைந்து ஜைன இளைஞர் மன்றத்தை நிறுவினார்கள் . பின்னர் இவர்களோடு கனக அஜிததாஸ் ,M.D இராஜேந்திரன் , S.இரமேஷ் குமார் C.அப்பாண்டை ராஜன் ,A.அப்பண்டைராஜன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மன்றத்தையும், முக்குடை இதழையும் துவக்கி சமுகத்தின் உயர்வுக்கும் சமய மேன்மைக்கும் அயராது தம் உடல், பொருள், சிந்தை என அனைத்தையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவைபுரிந்த அருகர் நெறிச் செல்வர்கள் பலர் இயற்கை எய்தினர். இந்த நிலையில் அந்த உயரிய சேவையைத் தொடர்ந்து செய்திட திருவறப் பொறியாளர் திரு A.சின்னதுரை ஐயா அவர்களது சீரிய தலைமை மற்றும் வழிகாட்டுதலில் ஈர்க்கப்பட்ட திருவாளர்கள். பொன் .இராஜேந்திரப் பிரசாத் , S.சிரேணிக ராஜன், P.சௌந்திர பாண்டியன், ஜெ சீத்தல் குமார் ஆகியோர் இணைத்துள்ளனர்.
செயலகம் – 5, தெற்கு போக் சாலை, தியாகராய நகர் , சென்னை-6 ௦ ௦ ௦ 17